உச்சநீதிமன்றம் முழு அளவில் நேரடி விசாரணை; தலைமை நீதிபதி அறிவிப்பு மேலும் சில செய்தித் துளிகள்

 


       👉 (04-04-22) வரும் திங்கட்கிழமை முதல் உச்சநீதிமன்றம் முழு அளவில் நேரடி விசாரணை; தலைமை நீதிபதி அறிவிப்பு 


கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொலி காட்சி வாயிலாகவும், வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நேரடி விசாரணையும் நடத்தப்பட்டு வந்த நிலையில் தலைமை நீதிபதி அறிவிப்பு.

            👀👀💝💝👀👀

    👉நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் ₹5 முதல் ₹85 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சுங்க கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


சுங்க கட்டணம் உயர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு; பஞ்சாபில் விவசாய சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹45 - ₹240 வரை அதிகரிக்க உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

            👀👀💝💝👀

    👉ஹைட்ரஜனில் இயங்கும் காரில் பயணித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாடாளுமன்றத்துக்கு ’மிராய்’ எனப்படும் ஹைட்ரஜன் காரில் கட்கரி பயணம்

தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு கார் இயங்கும்

             👀👀💝💝👀👀

    👉சென்னையில் 2வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் 

2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி


             👀👀💝💝👀👀

நிருபர் மணிவண்ணன்