ஒருவரி செய்தி துளிகள்

 


    🙏இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமண வரவேற்பு விழா மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.


திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்களுக்கு ஷங்கர் தம்பதியினர் நேரில் சென்று அழைப்பு.

            👀👀💝👀👀

    👉சென்னையில் 2வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் 

2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி

            👀👀💝👀👀

    👉எழுவர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை


தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் கேள்வி

            👀👀💝👀👀

    👉கலபுரகி மற்றும் கதக் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகளை தேர்வெழுத அனுமதித்ததாக புகார்  


வகுப்பறையில் மத ரீதியான உடைகளை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவை மீறியதாக ஆசிரியர்கள் மீது புகார்

            👀👀💝👀👀

    👉இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு போன்று அடுத்த 2 ஆண்டுகளில் நமக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது;  


ஏனென்றால் நம்முடைய பொருளாதார கொள்கை அப்படி உள்ளது - சீமான்

            👀👀💝👀👀

    👉சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில், திருடுபோன மயில் சிலையை தேடும் பணி 3வது நாளாக தொடர்கிறது - தீயணைப்பு வீரர்கள், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

            👀👀💝👀👀


நிருபர் பாஸ்கர்