ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் சுட்டுக்கொலை.

 


     நெல்லை களக்காட்டில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரால் சுட்டுக்கொலை.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி நீராவி முருகன் என்பவரை திண்டுக்கல் போலீசார் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே   சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த போது என்கவுன்டர்


நெல்லை,தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் கொலை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவுடி நீராவி முருகன் மீது உள்ளது

தப்பி ஓட முயன்ற ரவுடியை சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் என்கவுண்டர் செய்துள்ளனர்


எஸ்ஐ இசக்கி ராஜா உட்பட 3 பேருக்கு அருவாள் வெட்டு


தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன்,45 பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.


தூத்துக்குடியில் மனைவி, குடும்பத்துடன் வசித்து வந்த முருகனுக்கும், பிரபல தாதா ஒயின்ஸ் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒயின்ஸ் சங்கருக்காக பல காரியங்களை முருகன் செய்துள்ளான். அவனுடைய பெயரை தன்னுடைய மார்பில் முருகன் பச்சை குத்தி இருக்கிறான். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்ததால் 'நீராவி முருகன்' என்று பிரபலமானான்.இவரை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் களக்காடு அருகே நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது தப்பி ஒட முயன்ற நீராவி முருகன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நீராவி முருகன் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கைவரிசையை காட்டத் தொடங்கினான். 

அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி என்று இருந்த நீராவி முருகன், 98ல் தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே செல்வராஜை கொலை வழக்கில் காவல்துறையினர் சேர்த்தனர். திருப்பூரில் கொள்ளையடித்த நகை, பணத்தை பங்குபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை கொன்றான். ஆலடி அருணா கொலையில் கூலிப்படையாக மாறினான். இதனால் காவல்துறையினர், நீராவி முருகனை இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். கடந்த 2019ஆம் ஆண்டு நீராவி முருகன் கும்பல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


அந்த கும்பலை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது நீராவிமுருகன் உள்ளிட்ட கும்பல் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் சென்ற கார் அருகிலுள்ள ரோட்டோர சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியது. அந்த காரை போலீசார் சுற்றி வளைத்தபோது, நீராவி முருகன் அரிவாளால் போலீஸ் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொல்ல முயன்றார். சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் ரவுடிகள் சிலர் தப்பி ஓடிவிட்டனர். நீராவிமுருகன், கார் டிரைவர் மரிய ரகுநாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


இந்த நிலையில்  திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே போலீசாரின் என்கவுன்டரில், நீராவி முருகன் சுட்டு கொல்லப்பட்டார்.

என்கவுண்டர் செய்யும்போது குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ இசக்கிராஜா, காவலர்கள் காந்துமணி, சத்யராஜ், சுகந்தகுமார் திருநெல்வேலி அரசு  கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.


எஸ்.ஐ.இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசாரை தாக்க முயன்றபோது தற்காப்பிற்காக நீராவி முருகனை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர் -  நெல்லை எஸ்.பி


நிருபர் மணிவண்ணன்