அமோக வெற்றி திமுகவின் கோட்டையானது சென்னை மாநகராட்சி

 


    சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

 153 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை தி.மு.க தன்வசமாக்கியுள்ளது.


தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சி.பி.ஐ.எம் 4 இடங்களிலும். சி.பி.ஐ 1 இடத்திலும் வென்றுள்ளது.


அ.தி.மு.க 15 இடங்களில் மட்டும் வென்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டில் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் சுயேட்சைகளும், மற்ற கட்சிகளும் வென்றுள்ளன.


கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வசிக்கும், வார்டு 92 ஆவது வார்டில் - திமுக வேட்பாளர் 

வெற்றிச் செல்வன் வெற்றி


திமுகவின் மாணவர் அணியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி...


சென்னை வார்டு - 12ல் திமுக

வேட்பாளர் கவி கணேசன் 3368வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி


40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிசெட்டிபாளையம் நகராட்சி திமுக கைப்பற்றியதுநிருபர் கார்த்திக்