மின்னல் வேகம் என்பார்கள் ஆனால் அதை விட வேகமானதை முதல்வர் ஸ்டாலின் வேகம் எனலாம்

 


    👉பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவப்படம் - நேரில் சந்தித்து வழங்கிய எம்.எல்.ஏ ரோஜா - ஆர்.கே.செல்வமணி


மின்னல் வேகம் என்பார்கள் ஆனால் அதை விட வேகமானதை ஸ்டாலின் வேகம் எனலாம்


சித்தூரில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு 10,000 தமிழ் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  மின்னலை விட வேகத்தில் நிறைவேற்றினார்.  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு சித்தூர் எம்எல்ஏ ரோஜா பாராட்டு.

            👀👀❤👀👀❤👀👀

     ❤ மேலும் சில செய்தித் துளிகள்❤


   👉10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் 


* நாட்டில் சட்டப் பூர்வமாக நடைபெறும் டெண்டர்கள், பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம் - மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி


    👉5,794 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு - ககன்தீப் சிங் பேடி


    👉பாஜகவிற்கு ஒரே எதிரி திமுக தான்; ஆட்சிக்கு வந்து 8 மாதத்தில் திமுக அளித்த 517 தேர்தல் வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


    👉தி மைலாப்பூர் கிளப் வழக்கு: கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - நீதிமன்றம்    👉நீட் தேர்வு ஒரு பலிபீடம்.


சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பியுள்ளது நீட் தேர்வு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்


👉ஆளுநர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் - முதல்வர்


👉நீட் சட்ட மசோதாவை இயற்றும் தீர்மானம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது: சபாநாயகர்


 நிருபர் மணிவண்ணன்