கோவில் நிலம் குத்தகைக்கு விட்டதை எதிர்த்து வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில்(04-02-22)அன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில் செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவண நாதசாமி கோவிலுக்கு சொந்தமான காலி நிலம் கோவில்பட்டி டவுன் பகுதியில் உள்ளது. இந்த நிலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் வாடகை ஒப்பந்தம் செய்தவர்கள் முறைகேடாக 30 வருட குத்தகைக்கு கொடுத்துள்ளனர். இது இந்து அறநிலைத்துறை சட்ட விதிகளுக்கு எதிரானது எனவே கோவில் நிலத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் மனுவிற்கு இந்து அறநிலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
நிருபர் மணிவண்ணன்