ஹைதராபாத்தில் ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 


    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் ராமானுஜர் சிலை திறப்பு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்



தெலங்கானா - ஐதராபாத்தில், ஸ்ரீராமானுஜருக்கு ₨1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்


வைணவ மகான் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான 216 அடி உயர சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமானுஜருக்கு 200 கிலோ எடையில் தங்க சிலை கற்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


இந்த சிலைக்கு முன் செயற்கை நீர்வீழ்ச்சி தூண் அமைக்கப்பட்டுள்ளது.  இதை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கரில் சுமார் ரூ.1000 கோடியில் இவை அமைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களை சேர்ந்த 2,700 சிற்பிகள் இதில் பங்கேற்றனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட சமத்துவ ராமானுஜரின் சிலை, 9 மாதமாக 1,600 பாகங்களாக செய்யப்பட்டது. உதிரிபாகங்கள் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 60 சீன நிபுணர்களால் சிலை உருவாக்கப்பட்டது. பருவ நிலை மாற்றத்தை தாங்கி கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வகையில் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.


🙏தெலங்கானாவில் நடைபெறும் ராமானுஜரின் பொற்சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


த்ரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயருக்கு முதல்வர் வாழ்த்து கடிதம்.


திருமதி மோகனா