ஒரு வரிச் செய்தி சுருக்கம்

 


        👉முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல் நலம் விசாரித்த துணை குடியரசுத் தலைவர்.


    👉உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு

இதுவரை தொற்றுக்கு 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 16,051 பேருக்கு கொரோனா; 206 பேர் பலி; 37,901 பேர் குணமடைந்தனர்.     👍வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி: ஐசிசி டி20 தரவரிசையில் 6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதல் இடம்.


    👉பா.ஜ.க. ஆட்சியால் வீடுகளில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டிருக்கிறது - அமைச்சர் ராஜ்நாத்சிங்.


    👉திரைப்பட விருது விழா.! புஷ்பா படத்திற்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தாதா சாகேப் பால்கே விருது.


     👉தென்காசி : கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார்


புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.


    🙏பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு.! விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி டிவிட்


    👉தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு.


வாக்கு என்னும் மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்யலாம்.


    👉பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் பாகிஸ்தான்: உயர்கிறது போக்குவரத்து கட்டணம்.

பொதுமக்களிடம் தங்கத்தை கடனாகக் கேட்கிறது பாகிஸ்தான் அரசு.


    👉ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்; 4 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தகவல்..


    👉பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல்ஹாசன்!


   👦திமுக நிர்வாகி வெட்டிக்கொலை


சென்னை, காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை.


நிருபர் பாலாஜி