ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் வாக்களித்த பின் முதல்வர்

 


    மக்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேனாம்பேட்டையில் வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில். முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி  கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். உடன் வந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.


தேனாம்பேட்டையில் வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  துணை ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த ஒரு சம்பவம் கோவையில் நடைபெறவில்லை. தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டம், ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.


திருமதி மோகனா