சென்னை திருவொற்றியூரில் 3வது கணவருடன் ஏற்பட்ட சண்டையில் விபரீதம்
2வது கணவர் மூலம் தனக்கு பிறந்த 10 வயது மகளை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த தாய் ஜெயலட்சுமி (41) கைது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதி தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் ஐ.ஓ.சியில் டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 41). இருவருக்கும் கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டனர். ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பவித்ரா என்ற 10 வயது பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட மூன்றாவது கணவர் பத்மநாபன், தினமும் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். ஜெயலட்சுமி, எனது குழந்தையை காப்பாற்றவே உன்னை திருமணம் செய்துகொண்டேன் என அவ்வப்போது கூறுவார் .
அவர் கூறும் வார்த்தைகளே நம்பாத பத்மநாபன், மனைவி ஜெயலட்சுமியின் உடலில் வித்தியாசமான வாசனை வருகிறது. நீ எங்கு சென்று வந்தாய்? யாருடன் பழகுகிறாய்? என சந்தேக கேள்விகளை எழுப்பி வந்துள்ளார். இரவு 12.30 மணியளவில் சண்டை நடந்த நிலையில், நீ உண்மையில் கற்புக்கரசியாக இருந்தால் மகள் பவித்ராவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வை.நீ பத்தினி என்றால் அவளின் உடலில் தீ பிடிக்காது என கூறி தகராறு செய்துள்ளார்.
பத்மநாபன் கூறிய வார்த்தைகளை கேட்டு ஆத்திரத்தில் மதியை இழந்த தாய் ஜெயலட்சுமியும் மகளின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பவித்ராவின் உடலில் தீ பற்றி அலறவே, அவரை காப்பாற்ற இருவரும் போர்வையை போட்டு தீயை அணைத்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், திருவெற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, தீக்காயங்கள் அதிகமாக உள்ளதால் மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்பின் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, 75% தீக்காயத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், காவல் துறையினர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு , வழக்குப்பதிவு செய்த திருவெற்றியூர் காவல் துறையினர் பத்மநாபன் மற்றும் ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நிருபர் கார்த்திக்