அனுமதியின்றி கட்டிய கட்டிடங்களுக்கு 5 மடங்கு வரி உயர்வு... மேலும் சில செய்தித் துளிகள்

 


       💢அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மின்கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை ஐந்து மடங்கு அதிகமாக விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


    💢நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதான பண மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார். வழக்கு விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு


    💢நெல்லையில் கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் தாளாளர் , தலைமை ஆசிரியர் மீதான வழக்கு ரத்து செய்தது மதுரை உயர்நீதி மன்றம்


     💢தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை

            👀👀❤👀❤👀👀

    👉சென்னை திருமங்கலத்தில் உடலில் சர்க்கரை அளவு அதிகமானதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பல் மருத்துவர் பரத் (48) தூக்கிட்டு தற்கொலை; சடலத்தை கைப்பற்றி திருமங்கலம் போலீசார் விசாரணை!

            👀👀❤👀❤👀👀

    👉நீட் தேர்வு விலக்கு மசோதா - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்


அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் இன்றைய அனைத்துக்கட்சிக் முடிவு எடுக்கப்படும்

            👀👀❤👀❤👀👀

    👉சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை; காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல்.

            👀👀❤👀❤👀👀

    👉கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி வழங்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் நகலை மத்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் நேரில்  வழங்கினார் தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு

            👀👀❤👀❤👀👀

    👉இந்தியாவில் அதிக அளவில் போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் - 1.70 கோடி போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது .மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்

            👀👀❤👀❤👀👀

    👉ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் மூன்று நாள் பயணமாக டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி


வரும் 6ம் தேதி டெல்லி விரையும் அவர் 9ம் தேதி தமிழகம் திரும்புகிறார்


நீட் விலக்கு கோரிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தார்


            👀👀❤👀❤👀👀

    👉துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐ.பி.எஸ்.அதிகாரி 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கவும் விசாரணையை கூடுதல் ஆணையர் மேற்பார்வை செய்யவும் உத்தரவு.

            👀👀❤👀❤👀👀

    👉குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழசை சௌந்தராஜன் நிறுத்தப்பட்டால் ஆதரிக்க முடியாது 


டெல்லியில் விசிக எம்.பி. ரவிக்குமார் பேட்டி

            👀👀❤👀❤👀👀

    👮பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு சிறைத்துறை அதிகாரிக்கு அவரது மனைவி கிருத்திகா லஞ்சம் தர முயன்ற சம்பவம்


சிறை அதிகாரி செல்வம் பணியிடை நீக்கம்

            👀👀❤👀❤👀👀

    ✌குரூப் 4 தேர்வு அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும்; அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர்

            👀👀❤👀❤👀👀

    ✌தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் வரும் 10ஆம் தேதி நடத்தும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு - அண்ணாமலை


 3 மாணவர்கள் இறந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் தாளாளர் , தலைமை ஆசிரியர் மீதான வழக்கு ரத்து செய்தது மதுரை உயர்நீதி மன்றம்

            👀👀❤👀❤👀👀


நிருபர் பாலாஜி