தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது - சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை*

 


    தமிழில் "வணக்கம்" என்று சொல்லி சட்டமன்றத்தில் உரையை ஆரம்பித்தார் ஆளுநர்

 *தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது -ஆளுநர் ரவி* 


*கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள்.*


 *முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது ...ஆளுநர் ரவி* 


 *மீண்டும் மஞ்சப்பை திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என பல்வேறு திட்டங்களும் துவங்கியுள்ளது பாராட்டத்தக்கது.* 

 *மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.*


 *மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.*


*தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்.*


*நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.*


*நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.*


*நீட் தேர்வு தேவையில்லை  என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி.*

*‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்திற்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு.*


*முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்.*


*காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.*


*‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது.*


*தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும்- ஆளுநர் ஆர்.என்.ரவி.*

*“ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்” -ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.*


*உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதிபட உள்ளது.*


*மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.*


*தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.*


*500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்.*


*10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்*.


*தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.*


*உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.*


*மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் - ஆளுநர் என்‌.ஆர்.ரவி*


*மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பிரபலமான முதலமைச்சராக திகழ்கிறார்.* 

தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் ஆளுநர் உரையின் முழு படிவத்தில் கடைசியில் எங்கும் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இருப்பினும் ஆளுநர் தனது உரையில் முடிவில் இந்த வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.

*ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் 2022ல் தன் முதல் உரையில் பேச்சு.*


நிருபர் ராகவன்


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம🙏