தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு

 


       😪 தமிழகத்தில் நாளை முதல்  இரவு ஊரடங்கு 😪


தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்


அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை


மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு


இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு


தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த  தடை


பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி


1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு


அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்


ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி


உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி


ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்


கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி.மக்கள் கூட அனுமதியில்லை


மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!


திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் - தமிழ்நாடு அரசு


ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்-தமிழ்நாடு அரசு


டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றம் இன்றி 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும்.


 பால், மருத்துவம், பத்திரிக்கை, பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் இரவில் அனுமதி


முழு ஊரடங்கு என்பதால், ஞாயிறு அன்று பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது: தமிழக அரசு


 பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும் - தமிழக அரசு


 வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. - தமிழக அரசு


 அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைப்பு - தமிழக அரசு உத்தரவு


 திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி - தமிழக அரசு

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி


துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

 ஜனவரி 20ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு


நிருபர் கார்த்திக் 


🙏முக கவசம் தடுப்பூசி அவசியம்🙏