73வது குடியரசு நாளையொட்டி டெல்லியில் தேசியக் கொடியேற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

 


    குடியரசு நாளையொட்டி டெல்லியில் தேசியக் கொடியேற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.



  73வது குடியரசு  நாள் விழாவையொட்டி தில்லி ராஜபாதையில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது



 அதன்பின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. குடியரசு நாள் விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் வலம் வந்தன.


மேகாலயா, கோவா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம், கர்நாடகம் என 13 மாநிலங்களைச் சேர்ந்த 21 அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் அணிவகுத்து வந்தன.



73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை.


குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை (26-01-22)இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது


பணி ஓய்வுபெறும் விராட்டுக்கு பிரதமர் மோடி குடியரசு தின அணிவகுப்புக்கு பின்னர் அதனை தட்டிக் கொடுத்து விடை கொடுத்தார்