ஜனவரி,25 வீர வணக்க நாள் - மொழிப்போர் தியாகிகளுக்கு. தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம் -

 


   ஜனவரி,25 வீர வணக்க நாள் - மொழிப்போர் தியாகிகளுக்கு.  தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம் -


1938, 1965ஆம் ஆண்டு ஆதிக்க வர்க்கத்தின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த தியாகிகளின் பட்டியல்:


❤நடராசன்,

இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.


❤தாளமுத்து,

இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.


❤கீழப்பழுவூர் சின்னச்சாமி,

பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.


❤கோடம்பாக்கம் சிவலிங்கம்,

இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.


❤விருகம்பாக்கம் ஏ.அரங்கநாதன்,

பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.


❤சிவகங்கை இராசேந்திரன், மாணவர்.

பிறப்பு: 16.7.1945,  இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.


❤கீரனூர் முத்து,

பிறப்பு: 15.1.1943, இறப்பு: 4.2.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.


❤சத்தியமங்கலம் முத்து,

பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.


❤ஆசிரியர் வீரப்பன்,

பிறப்பு: 1.4.1938, இறப்பு: 12.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.


❤விராலிமலை சண்முகம்,

பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.


❤கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர்,

பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.


❤மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர்,

பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.


🙏செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்தொரு லாபமுண்டோ?


என்ற பாவேந்தருடைய வரிகளுக்கு ஏற்ப நம் தாய் மொழியாம் செந்தமிழ் மொழிக்கு தீங்கு என்றவுடன் தன் உயிர் தந்து தமிழ் மொழி காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு


வீரவணக்கம்.


🙏வீர வணக்க நாள் - மொழிப்போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மரியாதை


தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம் - மொழிக் காவலர்கள் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி முதல்வர் மரியாதை


தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் மொழி தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


நிருபர் கார்த்திக்