ஒரு வரி செய்தி சுருக்கம்

 


      💙  நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்; 

சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


     ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் : அமைச்சர் மா சுப்பிரமணியன்


     👉ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.: அமைச்சர் அன்பில் மகேஷ்


     👉நெல்லை பாளையங்கோட்டையில் குடிசை மாற்று வாரியத்தால் துப்புரவு பணியாளர்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ள  வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



      👉பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு பிரான்ஸ் அரசு அறிவுறுத்தல்_


 _பிரான்சில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அறிவுறுத்தல்_



     👉திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி



     👉தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரபிரதேசம் செல்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு_


அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 3 நாள் பயணம்.



     👉ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி என புகார் 


அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு


     👉திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிந்த வீடுகளுக்கு அருகில் உள்ள 24 வீடுகளை காலி செய்ய உத்தரவு


 குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கக்கூடிய வீடுகளை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ள நிலையில் உத்தரவு


     👉மதுரையில் அப்பள கம்பெனி பெயரில் லட்சக்கணக்கில் மோசடி.! பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு



     👉குற்றால அருவியில் வரும் 31.12. 2021 முதல் 02 .1.2022 ஆகிய மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவிப்பு.



     👉நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் தொழில் செய்ய தடை


நிருபர் கார்த்திக் 


🙏தடுப்பூசி முகக் கவசம் அவசியம்🙏