இரு வரி செய்திகள்

 


சென்னை: நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்சென்னை: கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடங்களில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.


                    💧💧💧💧💧

👤சென்னை வானகரத்தில் செயல்படும் மீன் சந்தை செயல்பட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிக தடை; மின் இணைப்பும் துண்டிப்பு


கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதை அடுத்து நடவடிக்கை

                    💧💧💧💧💧

👤உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள்


வெளி மாநிலத்திலிருந்து வரும் பயணிகளுக்கு இ-பதிவு  கட்டாயம்

                    💧💧💧💧💧

👤கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி


* கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி

                        💧💧💧💧💧

👤வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்; 


நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு.

                        💧💧💧💧💧

👤ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது அதனை தடுக்க முடியாவிட்டால், மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொள்ள வேண்டும் என்று பழமொழி உள்ளது” 


- கர்நாடக சட்டமன்றத்தில் முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்குமார்  பேச்சால் சர்ச்சை.

                            

                    💧💧💧💧💧

👤சென்னை சிட்லபாக்கத்தில் அதிவேகமாக சென்ற பைக் மோதி சாலையில் நடந்து சென்ற கொத்தனார் மாதவன் (40) உயிரிழப்பு


பைக் ஓட்டி வந்த சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் (22) கைது

                    💧💧💧💧💧

👤மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 40 லட்சம் பேர் பயனடைந்தனர் - தமிழக அரசு அறிவிப்பு


நிருபர் பாலாஜி 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏