முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.
ஒரு உண்மையான தேசபக்தரான பிபின் ராவத், நமது ராணுவ எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்துள்ளார்.
அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது - பிரதமர் மோடி
பிபின் ராவத் பலி - குடியரசு தலைவர் இரங்கல்
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
பிபின் ராவத் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - குடியரசு தலைவர்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம், இந்த நேரத்தில் பிபின் ராவத் குடும்பத்துடன் உடன் நிற்கிறோம்
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்
“முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்; இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்”
- உள் துறை அமைச்சர் அமித் ஷா.
“குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிற வீரர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” - குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு
வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் இரங்கல் குறிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தனர்.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் மறைவுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப்படை இரங்கல்.
பிபின் ராவத், விமானப்படை வீரர்கள் ஆகியோரின் உடல்கள் நாளை மறுநாள் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் 10-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்
பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு டெல்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் என தகவல்.
நிருபர் கபூர்