ஒருவரி செய்தி சுருக்கம்

 


     💢💥நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செமஸ்டர் தேர்வை இனி நேரடி எழுத்துத்தேர்வாகவே நடத்த வேண்டும்” - உயர்கல்வி நிறுவனங்களுக்கும் UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம்

                    💧💧💧💧💧

     💢💥தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவரை, 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம்


* மன உளைச்சல் அடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், ராகிங் செய்த  மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

                        💧💧💧💧💧

     💢💥திருவள்ளூரில் அரசுப்பேருந்து உட்பட 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் உட்பட 20க்கும் அதிகமானோர் படுகாயம்.!


                          💧💧💧💧💧

  💥💦ராணுவ ஹெலிகாப்டர் விழுவதற்கு முன்பு வீடியோ  எடுத்தவர்களின் செல்போன்கள் தேவைப்பட்டால் ஆய்வு செய்யப்படும், 


*குன்னூர் போலீசார் தகவல்.*

                  

                       💧💧💧💧💧

      👉அந்தியூர் அரசினர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்திய திமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம்!

                        💧💧💧💧💧

  💢💥நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு வாரண்ட் - சென்னை உயர்நீதிமன்றம் 


 புதுவை அரசு நிறுவனமான பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

                        💧💧💧💧💧

     💢💥 மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்திற்கான உண்மை காரணங்கள் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் 


தேசிய நெடுஞ்சாலை துறையிடம் தாக்கல் செய்தது நிபுணர் குழு

                        💧💧💧💧💧

      🙏முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அஸ்தி கங்கை நதியில் இன்று கரைக்கப்பட்டது


உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மறைந்த பிபின் ராவத், அவரது மனைவி அஸ்தி கரைக்கப்பட்டது

                        💧💧💧💧💧

     💢💥ஐஏஎஸ் அதிகாரிகள், குடும்பத்தினர் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் நடவடிக்கை: இறையன்பு அதிரடி

                          💧💧💧💧💧

     👉திராவிட இயக்க வரலாற்றில் பெரும் பங்கு வகித்த இடம் சேலம் - முதலமைச்சர் ஸ்டாலின்

                           💧💧💧💧💧

      ✌👉வேளாண் சட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்படுகிறது; 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன

 - அர்ஜுன் சம்பத்

                        💧💧💧💧💧


     💢💤2000 ஏக்கர் கோயில் சொத்துக்களை மீட்டு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்


- அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு.

                        💧💧💧💧💧

      💢💥கொடைக்கானல்  நகராட்சிக்குட்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள  452 கட்டிடங்களை அகற்றும் உத்தரவிற்கான, எழுத்துப்பூர்வமான அறிவிக்கை நகராட்சி அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது.

                        💧💧💧💧💧

      👅👿மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழக்கு


பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்


      💆விழுப்புரத்தில் கொடுமை.! காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர்!!


    நிருபர் பாஸ்கர்


🙏தடுப்பூசி முகக் கவசம் அவசியம🙏