இருவரி செய்திகள்

 


        👉செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது நீரை வெளியேற்ற முடியாமல் கோவில் நிர்வாகம் தவித்து வருகிறது.


                 ❤❤❤❤❤❤

     👮இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்களுக்கான பயிற்சி ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகளை செய்ய அந்தந்த மையங்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.


                   ❤❤❤❤❤❤

     👉குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யத் திட்டம்.

 

                   ❤❤❤❤❤❤


     💢💥அம்மா உணவகங்களை பெயர் மாற்றுவதோ, மூடுவதோ அரசின் நோக்கமல்ல. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. கலைஞர் உணவகங்கள் என்பது புதிய திட்டம்.- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.


                   ❤❤❤❤❤❤


     🙏🙏கிறிஸ்துவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ₹37,000-லிருந்து, ₹60,000-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.


                   ❤❤❤❤❤❤

     💢💥சென்னை தியாகராயர் நகரில், கொட்டும் மழையிலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


                   ❤❤❤❤❤❤

     🙏உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை பெரம்பூரில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.



    சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


               ❤❤❤❤❤❤

     💢💥ஐ.ஐ.டி செயல்பட 250 ஹெக்டேர் நிலம் ஒதுக்கித்தந்து, ஒத்துழைப்பு தருவது தமிழ்நாடு அரசுதான். சமீபத்தில் கூட ரூ.10 கோடி நிதியுதவி கோரி அரசுக்கு ஐ.ஐ.டி கடிதம் எழுதியிருந்தது.-உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

  

                     ❤❤❤❤❤❤



     👊👮நவகரையில் ரயில் மோதி  யானைகள் உயிரிழந்த   சம்பவத்தில் ஓட்டுனர் சுபையர் மற்றும் துணை ஓட்டுனர் அகில் மீது  கோவை வனத்துறையினர் வழக்குப்பதிவு.


                   ❤❤❤❤❤❤

    💥💢அமேசான் மூலம் கஞ்சா கடத்திய வழக்கு


மத்திய பிரதேசத்தில் 10 நிறுவனங்கள் ஒரே முகவரியில் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குஜராத்தை இந்த சேர்ந்த நிறுவனம் மத்திய பிரதேசத்தில் கறிவேப்பிலை என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்துள்ளது.


                  ❤❤❤❤❤❤

 

    💂💥புதிய வகை கொரோனா தொற்று: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு


                   ❤❤❤❤❤❤

     👉புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது - ராகுல்காந்தி எம்.பி


                   ❤❤❤❤❤❤

     😢ஆந்திராவையும் துவம்சம் செய்யும் கனமழை, வெள்ளம்:  44 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்.


                   ❤❤❤❤❤❤

     💥👉செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மறுவாழ்வு மையத்தில் 5 நபர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வம்சி (21) என்பவர் அடித்து கொல்லப்பட்டார்.


                   ❤❤❤❤❤❤

 

    💥💢தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும்  அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கு;  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


                   ❤❤❤❤❤❤

     👮👊மதுரையில் ஒரே நாளில் பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.


நிருபர் பாலாஜி