பாண்டிச்சேரிக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்

 


    பாண்டிச்சேரியில் டீசல் விலை 19 ரூபாய் வரை குறைந்துள்ளதால் கடலூர், விழுப்புரம் உட்பட எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட படையெடுத்து வருகின்றனர்.


மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் , டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது . இதனால் , தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ . 101.40 காசுகளுக்கும் , டீசல் ரூ .91.43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது .


 மேலும் புதுச்சேரியில் மத்திய அரசின் வரி குறைப்போடு கூடுதலாக , பெட்ரோல் , டீசல் மீதான வாட் வரியை , 7 ரூபாய் குறைத்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார் .


இதனால் , புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ . 12.85 காசுகள் குறைந்து ரூ .94.94 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது . இதேபோன்று , டீசல் விலை ரூ .19 குறைந்து ரூ .83.58 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது 


பெட்ரோல் விலையை தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .6.46 காசும் , டீசல் விலை ரூ .7.85 காசும் குறைவாக உள்ளது . இதை கருத்தில் கொண்டு , தமிழக எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவதற்காக புதுச்சேரிக்கு படையெடுக்கின்றனர் .


நிருபர் கார்த்திக்


😷முக கவசம் உயிர்க்கவசம்😷