ராயபுரம் பகுதியில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்துதல் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ

 


     இராயபுரத்தில் விழும் நிலையில்உள்ள 30 மரங்கள் கண்டுபிடித்து அதை வெட்டுவதற்காக 4 மரம் வெட்டும் இயந்திரங்கள்   ஐட்ரீம் மூர்த்தி அவர்களால் வாங்கப்பட்டு விழுந்த மரங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வெட்டப்படுகிறது.


இராயபுரத்தில் வேலை செய்யும் 30 கழிவு நீர் துறை ஊழியர்களுக்கு மழைக் கோட்டு ஐட்ரீம் மூர்த்தி வழங்கினார்.



 முதல்வரின் வழிக்காட்டுதலின்படி,  பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தும்  


50வது வட்டம் ஜூவரத்தினம் நகர் குடியிருப்பு, அத்திப்பட்டு குடிசைப் பகுதி, GM.பேட்டை குடியிருப்பு,இந்திரா நகர் குடியிருப்பு, பனைமரத்தொட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும். 



சாலையில்  விழுந்திருந்த  மரத்தை அப்புறப்படுத்தவும், தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. உடன், பகுதி செயலாளர் இரா.செந்தில்குமார் மற்றும் கழக உடன்பிறப்புகள் இருந்தனர். ஐட்ரீம் இரா.மூர்த்திஇராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்.


நிருபர் பாலாஜி