பெண் காவலர்க்கு வளைகாப்பு நடத்திய காவல்துறையினர் ...மேலும் சில செய்தித் துளிகள்

 


     🙏மணப்பாறை  காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு துணை கண்காணிப்பாளர் ஜனனிபிரியா, ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் வளைக்காப்பு நடத்திய காவல்துறையினர்.


                 ***************

       👮நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு


அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்  


💢மிக நீண்ட சந்திர கிரகணம்:💢


21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று நாளை நிகழ உள்ளது.


 திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. அனைத்து கோவில்களிலும் மகா தீபத்திருவிழா நடைபெற உள்ளது.                        ******


👉33 ஆயிரத்து 822 கோடி செலவில் 32 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.                        📱📱📱📱📱


👉நாட்டில் செல்போன் சேவை கிடைக்கப்பெறாத 7 ஆயிரத்து 287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கும் திட்டத்தை 6 ஆயிரத்து 466 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


                            *******


👉டெல்லியில் மத்திய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.                    🚉🚉🚉🚉🚉🚉


👉இந்திய ரயில்வேயில் முதன்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாட் ஹோட்டல் எனப்படும் அனைத்து நவீன வசதிகளும் அடங்கிய சிறிய ஓய்வறைகள் திறக்கப்பட்டுள்ளன.


                        🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


உடனடி ஆன்லைன் முன்பதிவு வசதி:


சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய 10 இடங்களில் உடனடி ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த உடனடி முன்பதிவுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை தவிர பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தலாம் என்று 

உத்தரவிட்டுள்ளது.                        🛕🛕🛕🛕🛕


👉நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


                    🌨️🌨️🌨️🌨️🌨️🌨️


        🙏தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்


 - பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.


                 🌨️🌨️🌨️🌨️🌨️🌨️


👉சென்னையில் 24 மணிநேரமும் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


            🏏🏏🏏🏏🏏🏏


டி20 கிரிக்கெட் போட்டி:


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


                        🏏🏏🏏🏏

   👉 நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கன மழையில் ஆனைகுளம் அருகே தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் 5500 கோழிகள் தண்ணீரில் மூழ்கி பலியாயின.


                    🛕🛕🛕🛕🛕


👉வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு.! சார்பதிவாளர் அலுவலக மேலாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தூத்துக்குடியில் பரபரப்பு


                    🛕🛕🛕🛕🛕

👉ஈரோடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலி


முத்துகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 8 பேர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து


விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி. மேலும் 3 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


                    🛕🛕🛕🛕🛕

👉வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ததற்கு தடைவிதிக்க முடியாது!: ஐகோர்ட் கிளை. 


நிருபர் மணிவண்ணன்