இன்றைய ராசிபலன்

 


      

         *_📅10- 10 - 2021⌚_*        ꧂

     *_🌻 ஞாயிற்றுக்கிழமை_*

               *_🌈 புரட்டாசி: - 24_*  

        *_🔎  ராசி பலன்கள்  🔍_*  *╚═══❖•ೋ° °ೋ•❖═══╝*


*_🔯மேஷம் -ராசி: 🐐_*

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் பற்றிய சிந்தனைகளின் மூலம் திருப்தியில்லாத நிலைகள் உண்டாகும். எண்ணிய பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.


⭐️அஸ்வினி : கவனம் வேண்டும்.

⭐️பரணி : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.

*---------------------------------------*


*_🔯ரிஷபம் -ராசி:  🐂_*

வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அறிமுகமும், ஆதாயமும் ஏற்படும். பங்குதாரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். நுண்கலைகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். வருவாய் மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.


⭐️கிருத்திகை : சாதகமான நாள்.

⭐️ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.

⭐️மிருகசீரிஷம் : ஈர்ப்பு ஏற்படும்.

*---------------------------------------*


*_🔯மிதுனம் -ராசி: 👫_*

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பயிற்சி சார்ந்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மேன்மை அதிகரிக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.


⭐️மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.

⭐️திருவாதிரை : சோர்வான நாள்.

⭐️புனர்பூசம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

*---------------------------------------*


*_🔯கடகம் -ராசி: 🦀_*

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். எதிர்பாலின மக்களின் வகையில் ஆதாயமான சூழ்நிலைகள் அமையும். கவலைகள் குறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம். 


⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.

⭐️ஆயில்யம் : ஆதாயமான நாள்.

*---------------------------------------*


*_🔯சிம்மம் -ராசி:  🦁_*

கல்வி சார்ந்த பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். திருப்தியான நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.


⭐️மகம் : குழப்பங்கள் நீங்கும்.

⭐️பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

⭐️உத்திரம் : சாதகமான நாள்.

*---------------------------------------*


*_🔯கன்னி -ராசி: 🧛‍♀️_*

உடல் உறுதி மற்றும் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் மாறுபட்ட சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். சிறு, குறுந்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். ⭐️உத்திரம் : தன்னம்பிக்கையான நாள்.

⭐️அஸ்தம் : லாபம் உண்டாகும்.

⭐️சித்திரை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

*---------------------------------------*


*_🔯துலாம் -ராசி: ⚖_*

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடம் கோபத்தை விட விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. கண்பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். சஞ்சலங்கள் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.


⭐️சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

⭐️சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

*---------------------------------------*


*_🔯விருச்சிகம் -ராசி: 🦂_*

பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்குவதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தீர்வு காண்பீர்கள். புதுமையான சிந்தனைகள் பிறக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். 


⭐️விசாகம் : நம்பிக்கை மேம்படும்.

⭐️அனுஷம் : குழப்பமான நாள்.

⭐️கேட்டை : தீர்வு காண்பீர்கள்.

*---------------------------------------*


*_🔯தனுசு -ராசி: 🏹_*

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மறதிகள் தோன்றி மறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.

⭐️பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

⭐️உத்திராடம் : சாதகமான நாள்.

*---------------------------------------*


*_🔯மகரம் -ராசி: 🐏_*

உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். லாபகரமான நாள்.ர


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு. 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.


⭐️உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.

⭐️திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

*---------------------------------------*


*_🔯கும்பம் -ராசி: 👃_*

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பிறமொழி பேசும் நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.  


⭐️அவிட்டம் : மேன்மையான நாள்.

⭐️சதயம் : அனுபவம் உண்டாகும்.

⭐️பூரட்டாதி : கவனம் வேண்டும்.

*---------------------------------------*


*_🔯மீனம் -ராசி: 🐠_*

மனதில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அமைதி உண்டாகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு. 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம். 


⭐️பூரட்டாதி : திருப்தியான நாள்.

⭐️உத்திரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

⭐️ரேவதி : நெருக்கடிகள் குறையும்.

*┈┉┅━••★★🌹★★••━┅┉┈*


திருமதி மோகனா செல்வராஜ்


😷 முக கவசம் உயிர்க்கவசம்😷