நான்காவது முறை கோப்பையை வென்றது சென்னை அணி இமாலய வெற்றி

 


     நான்காவது முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே

  

        கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இருப்பினும் அவர்களை தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர்.மேலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் இழந்தனர்.


20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது தோல்வி அடைந்தது கொல்கத்தா. தாக்கூர், ஜடேஜா, ஹேசல்வுட், பிராவோ, தீபக் சாஹர் என சென்னை அணியின் பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.அணியில் உள்ள வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டதே அணியின் வெற்றிக்கு காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


இந்த வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, கொல்கத்தா அணியின் உழைப்பு குறித்து புகழ்ந்துபேசி தனது பேச்சைத் தொடங்கினார்.


அவர் மேலும் பேசியதாவது, ''இம்முறை கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும் என நினைத்திருந்தேன். முதல் பாதியில் அவர்கள் இருந்த நிலையிலிருந்து தற்போது அவர்கள் அடைந்துள்ள நிலை, மற்ற எந்த அணியாலும் எளிதில் அடைய இயலாதது. சிறந்த வீரர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. தனித்தன்மை ஆட்டத்தைக் கொண்ட வீரர்களை சென்னை அணி கொண்டிருந்தது.


நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்களின் ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கிறது.எந்த ஆடுகளத்தில்  ஆடினாலும் சேப்பாக்கத்தில் விளையாடுவது போன்ற உணர்வை அது அளிக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. அடுத்தமுறை சென்னை ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் விளையாடுவோம் என நம்புகிறேன்'' என்று தோனி பேசினார்.


நிருபர் கார்த்திக்