மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 70 கடைகளை அகற்ற கடையின் உரிமையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 2018ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் சேதமானது.
தீ விபத்தில் வீர வசுந்தராயர் மண்டபம் 40 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமானது
கடைகளில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என்பதால் அங்குள்ள கடைகளை அகற்ற அப்போதே கோயில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது
கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்
நீதிமன்ற வழக்கு விசாரணையில் கடைகள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் மதுரை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோயிலில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ்