செய்திகள் சுருக்கம்

 


        சென்னை கோடம்பாக்கம் புலியூர் அருள்மிகு பரத்வாஜேஸ்வரர் திருக்கோயிலில் (திருவாலீஸ்வரம்) உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை இன்று(25.10.21) திறந்து வைத்தார்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு உடன் துறை செயலாளர் திரு.சந்திரமோகன், திரு. டாக்டர் எழிலன. ஆகியோர் உடன் இருந்தனர்.

*************

விண்வெளி குப்பைகளை குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


******


ஏவுகணைகளை சோதனை செய்வதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வடகொரியா திரும்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


*******


20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. 


******


தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் tnmedicalselection.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.


*****


பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கு அரசு இ-நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுச்சேவை மையத்தில் தடையில்லா சான்றிதழ் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


*******


சமையல் எண்ணெய் தடையின்றி கிடைப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள கையிருப்பு குறித்து மத்திய அரசுகளுடன் இன்று காணொளி மூலம் ஆய்வு நடத்துகிறது.


******


தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.


******


கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கும் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.


******


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


******


2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை கட்டிடக்கலை (பிஆர்க்) படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


********


விளையாட்டுச் செய்திகள்



டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


******


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 

*****


திருமதி மோகனா 


😷முக கவசம் உயிர் கவசம்😷