👉பாரதியாரின நினைவுநாளையொட்டி மெரினாவில் உள்ள சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவு நாளான மகாகவி நாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.
👉புதுச்சேரி: பாரதியார் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர். பாரதி பூங்கா எதிரே உள்ள சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
👉ஆரணி: ஆரணியில் 7 ஸ்டார் ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
👉சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். ஆகஸ்ட் 30ல் துபாய் சென்ற நிலையில் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார்.
👉டெல்லி: உ.பி மாநிலம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி இருக்கை அமைக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
👉நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது - ராதாகிருஷ்ணன்
👉மின்சாரத்துறையில் உள்ள 50 சதவீத காலிப்பணியிடங்களால் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது; மின்சாரத்துறைக்கான புதிய திட்டங்கள் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்ற பின் நிறைவேற்றப்படும்” - அமைச்சர் செந்தில் பாலாஜி
👉 புதுச்சேரியில் வ.உ.சியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியார் 100வது நினைவு ஆண்டு, நாட்டின் 75 வது சுதந்திர தின விழா ஆகிய முப்பெரும் விழாவை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
👉குஜராத்; அகமதாபாத்தில் சர்தார்தம் பவனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார்
குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க சர்தார் பவன் தொடங்கிவைப்பு.
👉தலிபான்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை: ரஷ்யா அறிவிப்பு
👉திமுக ஆட்சியில் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. அச்சுறுத்தல் மற்றும் அச்சப்படாமல் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வன்முறையாளர்கள் கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திண்டுக்கலில் பேட்டி.
👉தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - தொல்.திருமாவளவன்.
👉சபரிமலையில் செப். 17 முதல் 5 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
👉கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா வரும் 15-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - அமைச்சர் காந்தி
* இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையை காஞ்சிபுரம் பெறவுள்ளது - அமைச்சர் காந்தி
👉மகாகவி பாரதியார் மீது பிரதமர் அளவில்லாத மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்; அனைத்து தமிழ் மக்களும் உள்ளம் பூரிப்பு அடைந்துள்ளோம்"
-பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைப்பதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி.
👉மனநல சுகாதார சட்டப்படி, மனநல சிகிச்சை இன்சூரன்ஸ் திட்டத்தில் இருக்க வேண்டும்; சாதாரண மக்களும் இன்சூரன்ஸ் மூலம் மனநல சிகிச்சை பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்”
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.
👉கும்பகோணத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது 120 கிலோ கஞ்சா பறிமுதல் மற்றும் 2 கார்கள் பறிமுதல் தனிப்படை போலீசார் நடவடிக்கை.
👉திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிவேகமாக வந்த மினிபஸ் , இருசக்கர வாகனம் மீது மோதியதில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிய நான்கு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழப்பு.
👉பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபவர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவரப்படும் : அமைச்சர் மூர்த்தி பேட்டி!!
👉மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நாளை ஒரே நாளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறார் - தடுப்பூசி முகாம்களையும் தொடங்கி வைக்கிறார்
👉குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
👉விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக, பாமக, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 500 பேர் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
👉வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை - இருவர் கைது
நிருபர் பாலாஜி
😷முகக் கவசம் உயிர் கவசம்😷