பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்:

 


     திருமணத்தடை நீங்க சாம்பிராணி புகையிட்டு வழிபாடு


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா காடுவெளி என்ற ஊரில் அமைந்துள்ளது ஆகாசபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக ஆகாசபுரீஸ்வரர் இருக்கிறார். தாயார், மங்களாம்பிகை அமைந்துள்ளார்.


ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் சிவபெருமானுக்கு நேர் எதிராக காவலாக நந்தி பகவான் அமைந்திருப்பார். இவரது அனுமதி பெற்ற பிறகே சிவனை தரிசிக்க முடியும். அப்படியிருக்கும் நிலையில், இந்த கோயிலில் சிறப்பம்சமாக கோயில் கோபுரத்திற்கு வெளியில் நந்தி பகவான் அமைந்துள்ளார். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.


பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்:


சுக போக வாழ்க்கையை அனுபவிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ நினைப்பவர். அப்படியே வாழ்வர். அதிகளவில் கோவப்படும் குணம் கொண்டவர். பிடிவாத குணத்தோடு மிகவும் கடுமையாக பேசும் குணம் படைத்தவர். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.


பூராடம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோயில் மூலவரை வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்க பூராடம் நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரருக்கு சாம்பிராணி புகையிட்டு வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஆகாசபுரீஸ்வரருக்கு ஜவ்வாதி சாற்றி, கேசரி நைவேத்தியம் படைத்து வணங்கி வரலாம்.


பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதி ஆகாசபுரீஸ்வரர். மங்களகரமான வாழ்க்கை அருள்பவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாய வெளியில் உள்ள தேவதைகள், வாஸ்து பகவான் ஆகியோர் பூராட நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம்.


ஆகையால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரரை புனுகு, ஜவ்வாதி சாற்றியும், கேசரி நைவேத்தியம் படைத்தும் வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள் தங்களது ஜெனம் நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரருக்கு சாம்பிராணி புகையிட்டு வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.


ஆரம்ப காலத்தில் இந்த கோயிலில் கடுவெளிச்சித்தர் சிலை வடிவம் இல்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு தான், இந்தக் கோயிலில் திருப்பணி செய்த போது சித்தரின் சிலை கிடைக்கப் பெற்றது. சிவபெருமான் சித்தருக்கு காட்சி கொடுத்த போது அவருக்காக நந்தி பகவான் வெளியே நின்று கொண்டார். இதன் காரணமாக கோபுரத்திற்கு வெளியில் நந்தி இருக்கிறார்.


கடுவெளிச்சித்தர் அவதாரம் எடுத்த கோயில் இது. தான் அறிந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர், சிவனின் தரிசனத்திற்காக கடும் தவம் புரிந்தார். சித்தருக்காக எழுந்தருளிய சிவபெருமான் சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் புரிந்தார். பின்னொரு காலத்தில் சித்தருக்காக அருளிய சிவபெருமானுக்கு சோழமன்னன் கோயில் கட்டினான். இவர், பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாகவே திகழ்வதால், ஆகாசபுரீஸ்வர்ர் என்று பெயர் பெற்றார்..


🙏திருமதி மோகனா செல்வராஜ்🙏


😷முக கவசம் உயிர் கவசம்😷