தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

 


           தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு*


தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்


ஆர்.என்.ரவி நாகாலாந்து ஆளுநராகவும், தேசியபாதுகாப்பு துணை ஆலோசகராகவும் இருந்துள்ளார்



ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு புத்தகங்களை பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


 *தமிழகத்தின் ஆளுநரானது பெருமை*


*தமிழில் வணக்கம் என்று கூறி பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி*


பழம்பெருமை வாழ்ந்த தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் - 


தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி


என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள், தமிழக அரசின் முன்னேற்றத்திக்காக உழைக்க உள்ளேன்


தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது - புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி


மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது;ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு ஒட்டப்பட்டது


 *மாமல்லபுரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி*


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாமல்லபுரம் கடற்கரை கோயிலை குடும்பத்துடன் பார்வையிட்டார்.


மாவட்ட ஆட்சியர் ஆர்.ராகுல்நாத்,மாவட்ட எஸ்.பி விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தமிழகத்தின் ஆளுநராக  பதவியேற்ற உடன் குடும்பத்துடன் கோவிலில் வழிபாடு செய்தார்.


ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி பங்கேற்பு.


 ஆளுநருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழ்த்து


 சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்


* அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்.


😷முக கவசம் உயிர் கவசம்😷