சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் முதல்வர்

 


      ❤🙏சென்னை: இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். என் பாதை சுயமரியாதை, தமிழ்நெறி காக்கும் பாதை என முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


 சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விதி எண் 110ன் கீழ் நினைவிடம் அமைக்கப்படும் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு


 தோல்வி கலைஞரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை கைவிட்டதே இல்லை' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மேலும் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில்  ரு39 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.


 ❤🙏கலைஞர் துயில் கொள்ளும் இடம் அவர் போராடி பெற்றது என்று பேரவையில் துரைமுருகன் புகழாரம் கூறியுள்ளார். அண்ணாவுக்காக அந்த இடத்தை ஒதுக்கியவர் கலைஞர் என அவர் தெரிவித்துள்ளார்.


❤🙏கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது. என் தந்தை தீவிரமான கலைஞரின் பக்தர்; அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும்.  அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் எனவும் கூறினார்.


😷முகக் கவசம் உயிர் கவசம்😷