தமிழக முதல்வரின் அறிவுறுத்தலால் மீண்டும் செயல்படும் வணிகர் நல வாரியம்
தமிழ்நாடு அரசு வணிகத் துறை மற்றும் வடசென்னை அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகர் நலவாரியத்தில் முதல் தவணையாக சுமார் 500 சிறு வியாபாரிகள் இணைப்பதற்காக இலவச உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
வியாபாரிகள் சங்க தலைவர் A.எர்ணாவூர் நாராயணன் EX MLA விண்ணப்பத்தை வழங்க வணிக வரித் துறை இணை ஆணையர் திருமதிK. லதா அவர்கள் உறுப்பினர் படிவத்தை பெற்று வழங்கினார்.
முதன்மைபொதுச்செயலாளர் N.A. தங்கதுரை தலைமை தாங்க ஆர். கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இலவச உறுப்பினர்கள் சேர்க்கை 1989 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது. வணிக வரித்தறை இணை ஆணையர் அவர்கள் பேசும் பொழுது முதல்வரின் உத்தரவுபடி சிறப்பு முகாம் நடைபெறுவதாக கூறினார்.
நிருபர் பாலாஜி
🙏முக கவசம் உயிர் கவசம்🙏