75வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார்.

 


        75வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றினார். 


        75வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றுவதற்கு முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி சுதந்திர தின விழாவில் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.


 டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றியபின் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டை உருவாக்கியவர்கள், வளர்ச்சியடைய செய்த அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஆக.14ம் தேதியை பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ஏழைகளுக்கு 100 சதவீதம் வீட்டு வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


 ஒரே மாதிரியான வளர்ச்சிக்காக நகரம், கிராமமின்றி நாடு முழுவதும் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம். மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



 ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமரின் கதி சக்தி எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் நாட்டில் தொழில்துறை மேலாண்மை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்ன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினர் ஆகியோருக்கான ஒதுக்கீடு வழங்கப்படும்.


கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் மக்களுக்கு இடையிலான இடைவெளிக்கு பாலம் அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம், 4.5 கோடிக்கும் அதிகமான புதிய வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


🙏முகக் கவசம் உயிர் கவசம்🙏