சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம் .

 


         சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4ம் நாளாக தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள், ஸ்லாப்கள் சிதிலமடைந்துள்ள வீடுகளை கணக்கெடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளுக்கான குழாய் இணைப்பு, லிப்ட் வசதியை சீரமைக்கும் பணிகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்திருந்தால் ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம் எனவும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிட்டுள்ளார். 


எவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படுமா அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


😷முக கவசம் உயிர் கவசம்😷