அட்டகாசமான பருப்பு ரசம்

அட்டகாசமான பருப்பு ரசம் எப்படி வைப்பது…? வாருங்கள் அறியலாம்
ரசத்தில் பலவகை உண்டு. ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். இதில் பருப்பு ரசம் அட்டகாசமாக இருக்கும். இந்த பருப்பு ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

 • தக்காளி
 • கடுகு
 • சீரகம்
 • காய்ந்த மிளகாய்
 • உப்பு
 • பெருங்காயத்தூள்
 • பூண்டு
 • புளி
 • கறிவேப்பிலை
 • பருப்பு
 • தண்ணீர்
 • கொத்தமல்லி

செய்முறை

முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அதை நன்றாக பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது கையால் பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பூண்டு, சீரகத்தை இதனுடன் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கொத்தமல்லியையும் இதனுடன் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு எடுத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். பின் பருப்பை அவித்து அந்த தண்ணீரை இதனுடன் சேர்த்து விடவும். இல்லையென்றால் பருப்பை நன்கு அவித்து மசித்து இதனுடன் சேர்க்கவும். அதன்பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அட்டகாசமான பருப்பு ரசம் வீட்டிலேயே தயார்.

மிகவும் சுவையான மற்றும் சத்தான  பருப்பு ரசம் ரெடி. 

நன்றி

கார்த்திகா