தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்

 


          மத்திய அமைச்சராக எல்.முருகன் பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு தற்போதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். 


அதன்பின் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார்  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை ..


   மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்


தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!