🙏மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்*
👤குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கிறார் சபாநாயகர் அப்பாவு தகவல்*
👤சென்னை எம்ஜிஆர் நகரில், வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பாஜக நிர்வாகிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை; அவர்களிடம் ரூ. 40,000 போலீசார் பறிமுதல் செய்தனர்.*
👥👥பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியவில்லை; கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது
- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
👉தமிழ்நாடு.. தனியார் மருத்துவமனைகளிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி.. மா.சுப்பிரமணியன் தகவல்
👉பிளீச்சிங் பவுடர் உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட குழந்தை இசக்கியம்மாளுக்கு வயிற்றை துளையிட்டு உணவு வழங்கும் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது”
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
👉கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வில் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டெடுப்பு!
👉வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதி போட்டியில் இந்தியா தோல்வி
இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் காலிறுதி போட்டியில் தென் கொரியாவிடம் 6-2 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.
👉இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா.
“ 👉தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டித்தரப்படும்”
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.
👉கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து 14 வயது சிறுமி உயிரிழப்பு*
👤நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் (38) என்பவர் கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.ரயில்வே போலீசார் விசாரணை.
👤முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏