இந்திய அணி அபார வெற்றி தொடரை வென்றது

 


  இந்திய அணி அபார வெற்றி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 276 ரன்கள் தேவைப்பட்டது.


கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கிய போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.


 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது


இந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர், இந்திய அணி 40 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், மனிஷ் பாண்டே ஆகியோரு சுமாராக பேட்டிங் ஆடினர்.சூர்யகுமார் யாதவ் மட்டும் களத்தில் நின்று விளையாட, 6 பவுண்டரிகளை அடித்த அவர் அரை சதம் கடந்தார். எனினும், இந்திய அணி வெற்றி பெற அதிக ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் டக்கவுட்டாகி பெவிலியன் திரும்பினார். க்ருணால் பாண்டியா, தீபக் சஹார் ஜோடி சுதாரித்து கொண்டு ஆட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இன்றைய போட்டியில், கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் தீபக் சஹார்.


 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.


நிருபர் கார்த்திக்.