இரு வரி செய்திகள்

 


    சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கினார்.


       🙏அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும்;  தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding) உருவாக்க வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை       ஜூலை 16ம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை


தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர்  ஆலோசனை

       சென்னையை அடுத்த அயப்பாக்கம் தொழில் அதிபர் ராஜேஷ் என்பவரை சொத்துக்காக கடத்தப்பட்ட வழக்கில் அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது; தலைமறைவாக இருக்கும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உட்பட 9பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம்

                    *************

       👮👮நீதிமன்ற உத்தரவின் படி மதுரை பிபிகுளம் முல்லை நகர் பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், வணிக மையங்களை காவல் துறையினரின் பாதுகாப்புடன், வருவாய் துறையினர், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.     தொடங்கியது கொரோனா 3வது அலை- நீட் தேர்வு அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்.*


    _சென்னை: நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.     ராமநாதபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு செல்ஃபோனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர்  அபீப் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது!       ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய 112 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு, சோளிங்கர், ராக்கோணம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ உள்ளிட்ட 112 பேர் மாற்றம் செய்யப்பட்டனர்.


       அதிமுக ஆட்சியில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் விடப்பட்ட ரூ.240 கோடி மதிப்பிலான 2 டெண்டர்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி..!