தினம் ஒரு திருத்தலம்- காரோணம் காசி விஸ்வநாதர் ஆலயம்

 


தினம் ஒரு திருத்தலம்..காரோணம் காசி விஸ்வநாதர் ஆலயம்

 காரோணம்... ராமன் பிரதிஷ்டை செய்த லிங்கம்...!!

அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில்...!!

அமைவிடம் :

🌹 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மகாமக குளத்தின் வடகரையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலே திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று சிலர் சொல்கின்றனர்.

மாவட்டம் :

🌹 அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

🌹 சென்னையில் இருந்து அதிக பேருந்துகள் மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. மதுரை, திருச்சி, சேலம் மற்றும் கோவையிலிருந்து அதிக பேருந்து வசதிகள் உள்ளன.



கோயில் சிறப்பு :

🌹 மகாமகக் குளத்தின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை முதலிய நவகன்னியர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் காசியில் இருந்து அவர்களுடன் வந்து இங்கு தங்கினார். அதனால் காசிவிசுவநாதர் எனப் பெயர் பெற்றார். 

🌹 இத்தலத்தில் நவகன்னியர்களின் சிலை அவரவர் நிலத்தின் முகப்பாவனையுடன் அமைந்த திருமேனிகளுடன் எழுந்தருளியுள்ளனர்.

🌹 வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும். 

🌹 சண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

🌹 ராமர் இலங்கைக்கு செல்லும் முன்பு இத்தலத்திற்கு வந்து லிங்க பிரிதிஷ்டை செய்து ராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இக்கோயிலுக்கு வடகிழக்கு மூலையில் நாம் காணலாம். இந்த மகா லிங்கம் இன்றும் வளர்ந்து வருவதாக கூறுகின்றனர். 

🌹 இத்தலத்திலேயே ராமர் ராவணனை கொள்ள ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காரோணம் என்ற பெயர் பெற்றது.


கோயில் திருவிழா :

🌹 மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.


வேண்டுதல் :

🌹 பெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன் :

🌹 சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.


 பக்தியுடன்

மோகனா செல்வராஜ்


   🙏முக கவசம் உயிர் கவசம்🙏