😡தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டுக்கு ரூ.780, கோவேக்சின் ரூ.1410 மற்றும் ஸ்புட்னிக் வி செலுத்த ரூ.1145 மட்டுமே கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சகம்
😡44 கோடி வேக்சின்களுக்கு மத்திய அரசு ஆர்டர்
25 கோடி கோவிட்ஷீல்ட், 19 கோடி கோவாக்சின் மத்திய அரசு மூலம் ஆர்டர் செயயப்பட்டது
30% முன்தொகை மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்டது
😡11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழக அரசு வெளியீடு
ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் - தமிழக அரசு
😡மத்திய தொகுப்பில் இருந்து
கூடுதல் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதால்
ரேஷன் கடைகளில் குடும்ப
அட்டைதாரர்களுக்கு இருமடங்கு அரிசி
வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
👿3ஆம் அலையை தடுக்க ஒரே வழி.. சுதந்திர தினத்திற்குள் அனைவருக்கும் வேக்சின்..ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
👿தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாடில் உள்ள கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் நாளை இணைய தளத்தில் வெளியீடு - அமைச்சர் சேகர்பாபு
👿பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்
*மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்
*பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்
👿கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 கொரோனா தடுப்பு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு
என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது- தமிழக அரசு
பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273 என நிர்ணயம்
👾*நியாய விலைக் கடைகள் மூலமாக உணவுப் பொருட்களை நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு கொண்டு கொடுக்க மத்திய அரசு அனுமதி மறுப்பு. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அனுமதி கொடுக்க முடியாது.*
😡*கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் பலி*
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நல்லி பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சாமி கும்பிடும் போது, இடி மற்றும் மின்னல் தாக்கி கருப்பசாமி (16) மற்றும் தங்கமாரி, சண்முகசுந்தரவல்லி என 3பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.*
நிருபர். பாஸ்கரன்