கொரோனா நமது மிகப் பெரிய எதிரி: நாட்டு மக்களிடம் பேச்சு: பிரதமர் மோடி

      கொரோனா நமது மிகப் பெரிய எதிரி: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச்சு


• நவீன உலகம் கொரோனா போன்றதொரு பேரிடரை கண்டதில்லை


• நாட்டில் ஏப்ரல் மே மாதங்களில் கணிக்க முடியாத அளவிற்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்தது


• ரயில்கள் விமானங்கள் டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு தேவை பூர்த்திசெய்யப்பட்டது 


• கொரோனாவை தொடர்ந்து புதிய சுகாதார கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது


• கொரோனா சிகிச்சைக்கான மருந்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது


 • முன்கள பணியாளர்களுக்கு நாம் தடுப்பூசி போட்டதால் தான் பல லட்சம் மக்களை காப்பாற்ற முடிந்தது


• கோவேக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது


• உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்? 


கொரோனா தடுப்பு ஊசி இயக்கம் தொடர்பாக சில அரசியல் செய்கிறார்கள். அது கண்டனத்திற்குரியது


மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மத்தியரசு வழிகாட்டி வருகிறது


மாநிலங்களின்‌ தடுப்பூசி தேவையை அறிந்திருக்கிறோம். அதை பூர்த்தி செய்வோம்


• மொத்த உற்பத்தியில் 75% தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும்


• மொத்த உற்பத்தியில் 25% தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது


*தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளுக்கு சேவை கட்டணமாக ரூ .150 மட்டுமே வசூலிக்க வேண்டும்: பிரதமர் மோடி


 மாநிலங்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பு ஊசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும்


• மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை தனியாக கொள்முதல் செய்ய தேவையில்லை


• நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் எங்களுக்கு அவசியம் அவர்களது பாதுகாப்பில் சமரசமில்லை


• தீபாவளி பண்டிகை வரையில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்


பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்:                    

பெருந்தொற்று இன்னும் முடிந்துவிடவில்லை. நமது மொத்த சக்தியையும் பயன்படுத்தி #COVID19-க்கு எதிராக நாம் போராட வேண்டும். வைரசை நாம் கட்டாயம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது:                          


     கொவிட் தடுப்பூசிகள் தொடர்பாக விழிப்புணர்வை பரப்பும்படி நாட்டு மக்களை நான் வலியுறுத்துகிறேன். நாம் நமது பாதுகாப்பை கைவிட முடியாது: பிரதமர்


 இந்தியாவில் மேலும் மூன்று தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை


* மூக்கில் செலுத்தும் கொரோனா 

தடுப்பு மருந்து பரிசோதனையில் உள்ளது - பிரதமர் மோடி


 கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்

• இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் உதவியுள்ளது


• நாட்டில் இதுவரை 23 கோடி டோஸ்களுக்கும் அதிகமாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன


- பிரதமர் மோடி மக்களிடம் கொரோனா தொற்று பாதிப்பு பற்றி உரையாற்றினார்.