அறிவோம் இன்றைய வரலாற்று சரித்திரம் படைத்தவர்கள்

 


                         கிரண் பேடி

           

                 இ‌ன்றைய வரலாறு 


👮 இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். 


👮 இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும் மக்கள் மேம்பாட்டிற்காக விஷண் பவுண்டேசன், நவ்ஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.


👮 1979ஆம் ஆண்டு காவல்துறை வீரப்பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.


👮 மேலும் இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.


👮 இவர் பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவை ஆற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.


* * ** 

ஜார்ஜ் ஸ்டீபன்சன்




🚂 ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1781ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்டின் பகுதியில் பிறந்தார்.


🚂 இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.


🚂 மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரிசெய்து இரும்பு தண்டவாள ரயில் இன்ஜினை வடிவமைத்தார். 1829ஆம் ஆண்டு ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு வென்றது.


🚂 இங்கிலாந்தில் செஸ்டர்ஃபீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கல சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமும் வைக்கப்பட்டுள்ளது.


🚂 அடிப்படை கல்விக் கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த ஜார்ஜ் ஸ்டீபன்சன் 1848ஆம் ஆண்டு மறைந்தார்.


* * ** 


✍ 1834ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பைபிளை பல இந்திய மொழிகளில் மொழிப்பெயர்த்த வில்லியம் கேரி மறைந்தார்.


* * ** 


✍ 1870ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்தார்.


 

தொகுப்பு

மோகனா செல்வராஜ்