போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த முருகேசன் வழக்கில், சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

 


          சேலம் மாவட்டம் எடையபட்டி சோதனை சாவடியில் மளிகை கடை நடத்தி வருபவர்வெள்ளையன் என்கிற முருகேசன்*


இவர் தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தி விட்டு வீடு திரும்பும் போது எடையபட்டி சோதனை சாவடியில் போலிசார் சோதனை இட்டனர் மது அருந்தி விட்டும் மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றதும் தவறு என்று போலிசார் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்து கொண்டனர்*

 

இது தொடர்பாக போலீசாருக்கும் முருகேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டு போலீசார் அடித்ததில் முருகேசனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்*


இந்நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி  உயிர் இழந்தார்.


 போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் உயிரிழந்த வழக்கில், ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது



சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்


*என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன்


*தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


போலீசார் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.1கோடி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்


காவலர் தாக்கி விவசாயி முருகேசன் உயிரிழந்த சம்பவத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பத்து மணி நேரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது; உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம்.



சேலம் சரக டிஐஜி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு


   🙏முக கவசம் உயிர் கவசம்🙏


  நிருபர் தேவராஜ்