இரு வரி செய்திகள்... உண்மை செய்திகள்

 


கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் 3 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்துக்கு ₹5 லட்சம், மற்ற இருவரின் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சம் வழங்கவும், காப்பீட்டு திட்ட பண பலன்களை பெற்று வழங்கவும் உத்தரவுகன்னியாகுமரியில் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், லேசர் ஒளியூட்டல் வசதி அமைக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்👤கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை, விருப்பம் இல்லாமல் பணியாற்றி வருவதோடு,மன வெறுப்பில் இருப்பதாக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்.👤அங்கீகாரம் இல்லா பள்ளிகளை மூட உத்தரவு


தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு


😡தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு மே மாதத்தில் ஒரே மாதத்தில் 1.43 லட்சம் சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு உள்ளது.


👤👊கள்ளச்சாராய கும்பலுக்கு வெல்லத்தை விற்கும் வியாபாரிகள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு!


😡சிபிஐ அதிகாரிகள் அதிரடி


சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் உட்பட மூவர் கைது😡😠பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில், மதிப்பெண்களை குறிப்பிடாமல் "தேர்ச்சி" என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு*


அனைவருக்கும் தேர்ச்சி" என்று அறிவிக்கப்பட்டதால், பாட வாரியாக "தேர்ச்சி" என்று குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது*உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து: - 


காவல் ஆய்வாளர் உயிரிழப்பு . 


இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இதில் சென்னை ஆவடி பட்டாலியன்-2 காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் (56) உயிரிழப்பு மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


                    ****************

👥👤கோவை மாவட்ட வனப்பகுதியில்  கூடுதலாக1049.73 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு.மேட்டுப்பாளையம் கல்லார் யானைகள் வழித்தடத்தை தனியார் வனமாக மாற்றி, தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யானைகள் வழித்தடத்தை கொண்டு வந்து நடவடிக்கை. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை.*👪👩தமிழ்நாடு அரசு ஆர்டர் செய்ததில் 85,000 டோஸ்கள் கோவாக்ஸின் தடுப்பூசி சென்னை வந்தடைந்தன - மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன*வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் 8.5 லட்சம் பணத்தை திருடிய புகாரில் எஸ்ஐ உட்பட 2 காவலர்கள் சஸ்பெண்ட்*


 காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவு*


              B.  நிருபர் பாலாஜி