இன்றைய ராசிபலன்

 


       இ‌ன்றைய (13-06-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூன் 13, 2021


உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.ரிஷபம்

ஜூன் 13, 2021


எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.


ரோகிணி : கவலைகள் குறையும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.மிதுனம்

ஜூன் 13, 2021


குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். தந்தை வழி தொழில் சார்ந்த முயற்சிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : பேச்சுவார்த்தைகள் நிறைவேறும்.


புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.கடகம்

ஜூன் 13, 2021


மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் உள்ள நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும். கடன் தொடர்பான பிரச்சனைகள் எதிர்பாராத உதவிகளின் மூலம் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புபுனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.சிம்மம்

ஜூன் 13, 2021


உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மகம் : புரிதல் அதிகரிக்கும்.


பூரம் : தடைகள் அகலும்.


உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.கன்னி

ஜூன் 13, 2021


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வருவாய்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.துலாம்

ஜூன் 13, 2021


தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்சித்திரை : கவலைகள் நீங்கும்.


சுவாதி : ஆதரவு கிடைக்கும்.


விசாகம் : திறமைகள் வெளிப்படும்.விருச்சகம்

ஜூன் 13, 2021வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புத்தகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்விசாகம் : கீர்த்தி உண்டாகும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : தாமதங்கள் குறையும்.தனுசு

ஜூன் 13, 2021


கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமும், லாபமும் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்மூலம் : பொறுமை வேண்டும்.


பூராடம் : உபாதைகள் ஏற்படும்.


உத்திராடம் : விவேகம் வேண்டும்.மகரம்

ஜூன் 13, 2021


பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : நம்பிக்கை மேம்படும்.


அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.கும்பம்

ஜூன் 13, 2021


உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், சேமிப்புகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.


சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.மீனம்

ஜூன் 13, 2021


குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவின் மூலம் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.


ரேவதி : அமைதியின்மை உண்டாகும்.


                          *சுபம்*


          வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்