முதல் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியது

 


        உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.  

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே (49) ரன்களும் , கேப்டன் விராட் கோலி  (44) ரன்களும் எடுத்தனர்.


நியூசிலாந்து அணியின் தரப்பில்  ஜெமிஸன் சீசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 99.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கான்வே (54) ரன்களும்,கேப்டன் கேன் வில்லியம்சன் (49)ரன்களும் எடுத்தனர்.


முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி, இந்திய அணியை விட 32 ரன்கள் கூடுதலாக எடுத்து முன்னிலை பெற்றது.  மீண்டும் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் தொடர்ந்து ஆடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இந்திய அணியில் ரிசப் பன்ட் மட்டும் சிறிதளவு தாக்குபிடித்து 41 ரன்கள்சேர்த்தார். சவுதி 4 விக்கெட்களும், போல்ட் 3 விக்கெட்களும் எடுத்தனர். 


வெற்றி பெற 139 என்ற குறைந்து இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களை அஸ்வின் ஆட்டமிழக்க செய்தார். பிறகு கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட்  இழக்காமல்  பார்த்துக்கொண்டு வெற்றியை உறுதி செய்தனர்.


45.5 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியது


   நிருபர் கார்த்திக்


🙏முக கவசம் உயிர் கவசம்🙏