இன்றைய ராசிபலன்

 



         (09-06-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூன் 09, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சாஸ்திர கல்வி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.


பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.




ரிஷபம்

ஜூன் 09, 2021


தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்வது நல்லது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.



மிதுனம்

ஜூன் 09, 2021


எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கு அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்தி கொண்டிருந்த பலவிதமான துன்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் காரியங்களில் இருக்கக்கூடிய தடைகளை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : விரயங்கள் உண்டாகும்.


திருவாதிரை : தெளிவு கிடைக்கும்.


புனர்பூசம் : தடைகளை அறிவீர்கள்.



கடகம்

ஜூன் 09, 2021


கலை நுட்பமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழிலில் மேன்மையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பாராத பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். மனை விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். மறுமணம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.


பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.



சிம்மம்

ஜூன் 09, 2021


தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், சிறு சஞ்சலங்களும் உண்டாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இருக்கும் இடத்தினை சுத்தமாகவும், அதன் சிறப்பினை உணர்ந்தும் செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.


உத்திரம் : தீர்வு கிடைக்கும்.



கன்னி

ஜூன் 09, 2021


நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணப்புழக்கம் மேம்படும். கோவில் திருப்பணி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும்.



துலாம்

ஜூன் 09, 2021


தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கும். செயல்பாடுகளில் கவனக்குறைவு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியமாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.



விருச்சகம்

ஜூன் 09, 2021


உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அதிகாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


அனுஷம் : தனவரவுகள் கிடைக்கும்.


கேட்டை : அறிமுகம் உண்டாகும்.



தனுசு

ஜூன் 09, 2021


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். புதிய மாற்றங்கள் பிறக்கும். எந்தவொரு செயலிலும் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சந்தேக உணர்வுகளை தவிர்த்து சரியான முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், உதவிகளும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : இன்னல்கள் குறையும்.


பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.


உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.



மகரம்

ஜூன் 09, 2021


நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தீர்க்கமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : ஆசைகள் தோன்றும்.


அவிட்டம் : மேன்மையான நாள்.



கும்பம்

ஜூன் 09, 2021


நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையை கையாளவும். எதிர்பார்த்த சில அங்கீகாரங்கள் காலதாமதமாக கிடைக்கும். வாகனம் தொடர்பான விஷயங்களில் விரயங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகளின் தன்மையை அறிந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.


சதயம் : பொறுமை வேண்டும்.


பூரட்டாதி : விரயங்கள் ஏற்படும்.



மீனம்

ஜூன் 09, 2021


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். வேலையாட்களின் தன்மைகளையும், அவர்களை பற்றிய புரிதலும் மேம்படும். குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பங்கள் ஏற்படும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.


ரேவதி : காரிய வெற்றி உண்டாகும்.


                            *சுபம்"

      வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்