கோவில்களில் தமிழில் அர்ச்சனை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

 


    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 


தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை அனைத்து கோயில்களில் வைக்கப்படும். மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம்பெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.