ராகுல் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு ராயபுரத்தில் தடுப்பூசி முகாம்

 


     *காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் சென்ட் பீட்டர்ஸ் பள்ளி வளாகத்தில் 50 வட்ட தலைவர் பீ.ஜேம்ஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.*


*இம்முகாமினை வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ் திரவியம் துவக்கிவைத்தார்.தடுப்பூசி முகாமில் பொதுமக்கள்,கல்லூரி மாணவ மாணவியர்கள்,முன்களப்பணியாளர்கள் என அனைவரும் பங்குகொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர்.*


*இந்நிகழ்வில் ராயபுரம் 1வது சர்கில் தலைவர் ஏ.ஜே.காலனி பீ.சிவா மற்றும் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் கே.இராமலிங்க ஜோதி,தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் ஆர.டி குணாநிதி,பி.சி.சி எர்னஸ்ட் பால்,


வடசென்னை மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் ஜே.ஜெயந்தன் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை,ஆர்.சுரேஸ்குமார்,புலவர் ஏ.குமார்,ஆர்.சுரேஸ்குமார்,பீ.புஷ்பலிங்கம்,ஏ.கோபி,ஏ.ஜே.கிஷோர்,எச்.அப்துல்கபூர்,எஸ்.சபரீநாதன்,ஜீ.எம்இர்பான்,டீ.தேசமனி,பீ.ரமேஷ்,செல்வராஜ்,எம்.டீ.ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.*


 நிருபர் ராஜ்குமார்

🙏முக கவசம் உயிர் கவசம்🙏